மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கைப்படி தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தி அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்த்ததால் ’இந்தி கட்டாயம் இல்லை’ என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்பதில் இதுவரை மாற்றமில்லை.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அடதைத்தொடர்ந்து, அமைச்சரவை எகூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.