மும்பை
ரூ. 2000 நோட்டுக்களில் 98% ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந் தேதி அவை வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரூ. 2000 நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்தவும், மாற்றிக்கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் அந்த நோட்டுகளை தற்போதும் மாற்றிக் கொள்ள முடியும்.
ரூ. 2000 நோட்டுக்கள் வாபஸ் அறிவிப்பு வெளியான நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இதுவரை 98.12 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாகவும், தற்போது, ரூ.6 ஆயிரத்து 691 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது