திஸ்பூர்

சாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாத்ததில் இருந்து அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கனமழையால் பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலு, திகவ், ஜியா-பராலி, பேகி, ஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது.  அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரை அசாம் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 10 காண்டாமிருகங்கள் உட்பட 180 வன விலங்குகள் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 75 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2,406 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 2.95 லட்சம் பேர் 316 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.