கோலாப்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் அருகே 90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோலாப்பூர் மாவட்டம், புதர்கட் தாலுகாவில் நகன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு கிருஷ்ண நலவாடே( வயது 53). கடந்த 2015, மார்ச் 4-ஆம் தேதியன்று இதே ஊரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியின் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்தார்.  அங்கு தனியாக மூதாட்டியை   விஷ்ணு பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதர்கட் காவல்துறையினர் விஷ்ணுவை கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அதிதி கதம், குற்றவாளியின் செயல் மனிதநேயமற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, குற்றவாளி விஷ்ணுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.