COVID-19-ஐ விட பொருளாதாரம் மற்றும் நமது சுகாதார அமைப்புகள் அதிக மக்களைக் கொல்லும் என்று பில் கேட்ஸ் கூறினார்.
COVID-19 பெருந்தொற்றுநோய் ஒரு முடிவுக்குள் வருவதற்குள் மில்லியன் கணக்கானவர்கள் இறக்க நேரும் என்று பில் கேட்ஸ் கூறினார். ஆனால், இந்த இறப்புகள் நோயின் காரணமாக இல்லாமல், உலகளவில் சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதாரங்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிக நெருக்கடியினால் நேரும் என கூறினார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு “சரியான” பயனுள்ள தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என உற்பத்தி செய்யப்படும் என்றும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் நோய்த்தடுப்பு செய்யப்படுவார்கள் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவது தடுக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.
தனது அறிக்கையை விரிவாகக் கூறிய கேட்ஸ், 90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா வைரஸுடன் தொடர்பில்லாதவையாக இருக்கும் என்று கூறினார். “ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட பிறகு பிற நோய்களுக்கான மருத்துவ அணுகல் தடைப்பட்டுள்ளது என்றார். மேலும், மலேரியா மற்றும் எச்.ஐ.வி நோயால் இறப்பு அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். தொற்று நோய்கள் மேலாண்மைக்கு என பில் கேட்ஸ் அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது போதாது, இன்னும் தேவைப்படுகிறது என கேட்ஸ் “தி எகனாமிஸ்டு”க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“டிரில்லியன் கணக்கான இழப்புகளை ஏற்படுத்தும் பொருளாதார சேதத்தைத் தடுக்கக் கூடிய COVID-19 தடுப்பு மருந்தைத் தயாரிக்க பில்லியன்கள் கணக்கில் செலவிடப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஏழை நாடுகளைப் பற்றி ஏற்படுத்தப்படும் நம்பமுடியாத போலி தகவல்களால் பல ஏழை நாடுகளில் சேதத்தின் துல்லியமாக மதிப்பிடுவது கடினமாகியுள்ளது. “ஆகஸ்ட் 17 க்குள், ஆப்பிரிக்காவில் 25,000 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன, இந்தியாவில் கிட்டத்தட்ட 52,000 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். இருப்பினும், இரு இடங்களிலும் உண்மையான எண்ணிக்கை அதைவிட மிக அதிகம்” என்று கேட்ஸ் மேலும் கூறினார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி குறித்து விளக்கிய கேட்ஸ், புழக்கத்தில் உள்ள மற்ற கொரோனா வைரஸ்கள் COVID-19 க்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை வழங்கியதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது என்று கூறினார். “தனித்துவ கொரோனா வைரஸ் தொற்று, மற்ற தொற்றுகளைப் போன்றதல்ல. உலக மக்கள்தொகையில் சுமார் 30-60 சதவிகிதத்தினருக்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார், “அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் போன்றதல்ல, இல்லாவிடில் 90% க்கு மேலான மக்கள் தடுப்பு மருந்து எடுக்க வேண்டியதிருந்திருக்கும். ” என்றார்.
Thank you: Money Control