பெங்களூரு:

ஸ்ரோ நிறுவனம் ஆன்லைன் மூலமாக விண்வெளிப் புதிர் போட்டியை நடத்தி அதில்  70 மாணவர்களைத் தேர்வு செய்யதுள்ளது. இவர்களில் ஒருவரான  9வயது மாணவியின் அசத்தல் பதில்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 07 ந்தேதி அன்று நள்ளிரவு நிலவில் கால் பதிக்க உள்ளது. இந்த அரிய நிகழ்வை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் காண உள்ளனர். இந்த நிகழ்ச்சி இஸ்ரோவின்  பெங்களூரில் உள்ள தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

இதை நேரலையில் காண, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிர் போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த புதிர்போட்டி , MyGov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 10 முதல் 25 வரை புதிர் போட்டியை இஸ்ரோ  நடத்தியது.

அதன்படி, 10 நிமிடங்களில் அதிகபட்சமாக 20 கேள்விகளுக்கு பதிலக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் விதி. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இப்போட்டி யில் பங்கேற்றனர். இதில், குறைவான நேரத்தில் சரியான பதில்களை அளித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புதிர் போட்டியில்,  மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்த்வானைச் சேர்ந்த 9 வயது மாணவி புஷ்ரா ஆலம்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் இஸ்ரோவின் ஒரு ஆன்லைன் வினாடி வினாவுக்கு கேள்விப்பகுதியில், அமர்ந்து இஸ்ரோவின் கேள்விகளுக்கு அநாயகமாச பதில் அளித்து ஆச்சசரி யத்தை ஏற்படுத்தினார். இவரது பேட்டி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இவரும், சந்திரயான் -2 தரையிறங்குவதைக் காண இஸ்ரோவால்  தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும், பிரதமர் நரேந்திர மோடியுடன்  விண்வெளி தரையிறங்குவதை நேரலையில் பார்க்கும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.

செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளாக லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதனுள், நிலவின் மேற்பரப்பு மீது வலம்வரும் ரோவர் பிரக்யான் உள்ளது.

சந்திரயான் 2 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் இணையும். இருப்பினும், நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கும் முதல் திட்டம் என்ற பெருமை சந்திரயான் 2க்கு மட்டுமே.