ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி

தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே உளள குரங்கணி  மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள் அங்கு பரவிய காட்டுத்தீயில் சிக்கினார்கள்.

அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீயில் சிக்கி 9 பேர் பலியாகி  உள்ளதாக தேனி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது  தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை. மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து அமைந்துள்ள இப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சியும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,கடந்த இரண்டு நாட்களுக்கு முனபு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த 24 பேரும், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர்களும் சுற்றுலாவாக வந்ததாகவும், பின்னர்,  அங்கிருந்து குரங்கணிக்கு மலை பகுதிக்கு சென்று மலையேறும் பயிற்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

8 பேர் குழுக்களாக பிரிந்து சென்ற அவர்கள், மலையேற்ற பயிற்சியை முடித்துக்கொண்டு, வீடு திரும்பியதுபோது, வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர். இதன் காரணமாக செய்வதறியாத திகைத்த அவர்கள், கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து வனத்துறையினர், மற்றும் ராணுவ்ததினர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓபிஎஸ்சும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலமுத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நுரை கலந்த தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது.  மலைப்பகுதில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இரவு முழுவதும் நடந்த தேடுதல்வேட்டையில்   27 பேர் மீட்கப்பட்டதாகவும், தீ விபத்தால் காயமடைந்தவர்களுக்கு  போடி மற்றும் தேனி,  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களைத் தவிர 5 பெண்கள் உள்பட 8 பேரை காணவில்லை. அவர்கள் உடல் கருகி இறந்திருக்கலாம் என தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மலை கிராம மக்களும், தன்னார்வலர்களும் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் கூறுகையில், வனப்பகுதியில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபட்டோம்.

தீயில் கருகியதில் 9 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 15 வயது சிறுவன் என 9 பேரின் உடல்கள் வனப்பகுதியில் கிடப்பதாகவும், அவர்களின் உடல்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இதை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் உறுதி செய்துள்ளார்.