சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
“சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் ஜிசான் அருகே சாலை விபத்தில் ஒன்பது இந்தியர்கள் பரிதாபமாக இறந்ததற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கு சவூதி அரேபியாவில் ஜிசான் அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இது தவிர, சவூதி அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து அறிந்து ‘வருத்தம் அடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.