சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மேலும், 28 மாவட்டங்களில்  காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில், 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும்இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 34 லட்சத்து 66 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது., மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி சீட்டு  இல்லாத வாக்காளர்கள்வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர்உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கரநாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம்தேதி எண்ணப்படுகின்றன.

மொத்தம் 74 மையங்களில் 12-ம் தேதிகாலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.