சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் 8வது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் 26-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் (திங்கட்கிழமை) தமிழக அமைச்சரவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் சில ஆலோசனைகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றபிறகு நடத்தப்படும் 8 ஆவது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.