கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 86% மக்கள், அது உறுதிசெய்யப்படாமல் சுற்றி வருகிறார்கள் என்று பிரபல ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 182,400 பேருக்கு பரவியுள்ளது, இதனால் குறைந்தது 7,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிரபல ஆய்வு நிறுவனமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தகவல்கள் தெரிவித்துஉள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தின் ஆய்விதழில் வெளியாகி உள்ள தகவல்படி, சுமார் 86 சதவிகித மக்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், “திருட்டுத்தனமாக” கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பி வருகின்றனர்… அவர்களின் நோய் கண்டறியப்பட வில்லை என்று தெரிவித்து உள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர், சீனாவில், ஒவ்வொரு 7 நிகழ்வுகளி லும் 6 நிகழ்வுகளில் – அதாவது 86% பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படாமலேயே அவர்கள் சுற்றி வந்தனர், இது வைரஸ் பரவுவதை அதிகரித்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் பள்ளியின் ஆய்வாளர் ஜெஃப்ரி ஷாமன் கூறுகையில், சீன நகரமான வுஹானின் பயணத் தடைக்கு முன்னும் பின்னும் கணினி மாடலிங் பயன்படுத்தி, தொற்றுநோய்களைக் கண்டறிந்தனர்.
கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டப்படாத அல்லது லேசான அறிகுறிகளுடன் இந்த ஆவணமற்ற நோய்த்தொற்றுகள் – “திருட்டுத்தனமானவை” என்று அழைக்கும் ஆய்வாளர்கள், “இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை லேசானவை, சில அறிகுறிகளுடன் காணப்பட்டன” என்றும், “இது ஆவணப்படுத்தப்படாத நோய்த்தொற்றுகளை பரப்புவதற்கு வழிவகுத்தது என்றும் ஷாமன் கூறி உள்ளார்.
மக்கள் நோய் தொற்றின் தீவிரம் குறித்து அறியாமலும், அதை அங்கீகரிக்காமலும், வெறும் ஜலதோஷம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ” இதனால்தான், கொரோனா தொற்று பிற நபர்களுக்கும் பரவி பெரும் பிழையை ஏற்படுத்தியது.
இந்த வைரஸ் தாக்குதல், உலக நாடுகளுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கும் என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் ஷாமன், நோய் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவம் அதிமுக்கியம் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.