போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை இந்த ஆண்டில் சென்னையில் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை சார்பில் டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, போக்குவரத்து சிக்னலை மீறுவது, தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் தலைக்கவசம் மற்றும் சிக்னல் மீறல் குறித்த வழக்குகள் அதிகரித்துள்ளது.

வேகக் கண்காணிப்பு கருவிகள் அதிகளவில் பொருத்தப்பட்டால் வேகக் கட்டுப்பாட்டை மீறுவது தொடர்பாகவும் அதிக வழக்குகள் பதிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்று டெலிவரி ஊழியர்களுக்குக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.