டில்லி

ந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 8 மாநிலத்தில் மட்டும் 85% பேர் உள்ளனர்.

இந்தியாவில் படு வேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.  உலக அளவில் ஒரு கோடியைத் தாண்டி உள்ள பாதிப்பில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை 5.29 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 16,103 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இது உலக அளவில் 8 ஆம் இடம் ஆகும்.

இதில் பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளன.    இந்த 8 மாநிலங்களிலும் மொத்தம் பாதிக்கபடோர் எண்ணிக்கையில் 85% பேர் உள்ளனர்.  இதைப் போல் இந்த 8 மாநிலங்களில் மரணமடைந்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 87% ஆகும்.

இது தகவலை நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ளது.   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடந்த சில நாட்களாகப் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.    அதே வேளையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குணமடைவோர் சதவிகிதம் அதிகம் உள்ளதாகவும் மரணமடைந்தோர் சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி குணமடைந்தோர் 58% ஆகவும் உயிர் இழந்தோர் 3%க்கும் குறைவாகவும் உள்ளனர்.  கடந்த இரு வாரங்களாகவே அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   அதைப் போல் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை அதிக அளவில் செய்யப்படுகிறது.