ஐதராபாத்:
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற 84 தமிழர்களை செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி ஆந்திரா போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களை ரேணிகுண்டா தாசில்தார் நரசிம்மலு நாயுடு நிபந்தனையுடன் விடுதலை செய்தார்.
செம்மரம் வெட்டுவதற்கு வரமாட்டோம் என்று 84 பேரிடமும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. செம்மரம் வெட்ட வந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.