சென்னை: மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 84.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், கரடுமுரடான தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், பலர் மெட்ரோ உள்பட ரயில் சேவைகளையே நாடுகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால், இன்றைய சென்னைமக்களிடையே மெட்ரோ ரெயில் பயணம் தவிர்க்க முடியாத அளவுக்கு உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.05.2024 அன்று 3,03,109 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மே மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 36,97,773 பயணிகள் பலன் அடைந்துள்ளனர்.
மேலும் பயண அட்டைகளை பயன்படுத்தி 32,10,776 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 52,055 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,307 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 14,55,161 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.