இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்டமாக இந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது.இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.

பங்கஜ் திரிபாதி, சாஹில் கட்டார், சஹீப் சலீம், தாஹிர் ராஜ் பாசின் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும், சந்தீப் பட்டிலாக அவரது மகன் சீரங்கும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்திரைப்படத்தின் தன்குழுவினருடனான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]