திருப்புத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்குகொண்டநிலையில், சில மாடுகள் பார்வையாளர்களிடையே ஓடியதால், ஏராளமானோர் காயம் அடைந்தனர். 82 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி காலை 11.30 மணிக்கு, அக்கிராமத்தில் பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கிராமமக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். தொழுவில் இருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதியில் மஞ்சு விரட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம், சிராயவல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி போன்ற பல பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் மஞ்சுவிரட்டில் பங்கேற்றன.
இந்த போட்டியின்போல சில காளைகள் பார்வயைளர்களுக்கு இடையே புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாடுகள் முட்டியதில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் 82 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள பல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 30பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள மருத்துவ முகாமிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.