அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி இருக்கிறது. 6 மாதங்கள் கடந்தும் வைரசின் தாக்கம் வேகம் குறைய வில்லை.
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
நேற்று வரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 13,098 ஆகவும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,891 ஆக உயர்ந்து உள்ளது. புதியதாக 11 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 180 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது வரை 7,479 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்,