சென்னை: தமிழ்நாடு அரசு  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது,

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு கலெக்டராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் சார் ஆட்சியர் கு.ரவிகுமார், கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திர சேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக நே.பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]