வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதையடுத்து ஏற்கனவே 7 இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்காவுக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போத மேலும் 8 நாட்டினர் அமெரிக்க வர தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்பர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் ஒபாமா வின் பழைய உத்தரவுகளை தடை செய்தும், புதிய உத்தரவுகளை பிறப்பித்தும் அதிரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்.
ஒபாமா கொண்டு வந்த காப்பீடு திட்டம் ரத்து, மீண்டும் சித்ரவதை தண்டனை போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அதுபோல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், சிரியா, சூடான், ஈராக், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 8 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதுகாப்பு காரணத்திற்கா வடகொரியா, வெனிசுலா, சேட், ஈரான், சோமாலிய, சிரியா, உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.