லக்னோ: உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறுகையில், ஜான்சி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சிறுமியை 8 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை மிரட்டி ரூ. 3 ஆயிரம் வாங்கியுள்ளனர்.
இதில் ஈடுபட்ட 8 மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்று கூறினார்.