சிலான்
கடந்த 15 நாட்களில் பீகார் மாநிலத்தில் 8 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இவ்வாறு பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை பீகாரின் சிவான் மாவட்டம் கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைக்கிறது. பீகாரில் கடந்த 15 நாள்களில் நிகழ்ந்த 7வது சம்பவம் இதுவாகும். நேற்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. சாப்ரா மாவட்டத்தில் இருந்த பழமையான பாலம் ஒன்று பலத்த மழைநீரால் இடிந்துள்ளது.
பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாபா தோத்நாத் கோயில் அருகே உள்ள ஆற்றின் மேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த 15 நாட்களில் இடிந்து விழுந்த 8வது பாலமாகும்.
பீகாரில் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.