சென்னை:
7வது ஊதியக்குழு பரிந்துரைகள்படி குருப் ஏ, பி,சி,டி, அரசு ஊழியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் அரசிதழில் வெளியாகி உள்ள அரசாணை எண் எம்எஸ்-41ல் அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
7-வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,000 – ரூ.18,000-ஆக நிர்ணயித்தது. அதேபோல், அதிகபட்ச ஊதியமாக ரூ.90,000-ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயித்தது. இது, 6-வது ஊதியக்குழு நிர்ணயித்த அடிப்படை ஊதியத்தை விட 2.57 மடங்கு அதிகம் என கூறப்பட்டது. தமிழகத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் கடந்த (2018)ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வந்தது. இந்த நிலையில், ஊதியக்குழு பரிந்துரைகள்படி குருப் ஏ, பி,சி,டி, அரசு ஊழியர்கள் யார் யார் என்பதை விளக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.