மும்பை
மகாரஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி 7955 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய ஆளும் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் தாராவி தொகுதியில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகவே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த பாபுராவ் மானே வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பா.ஜனதாவின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மான்கூர்டு – சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். போரிவிலி பா.ஜனதா வேட்பாளர் சஞ்சய் உபாதய், பா.ஜனதா அதிருப்தி வேட்பாளர் கோபால் ஷெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாநிலம் முழுவதும் நேற்று இரவு 9 மணி வரை 10 ஆயிரத்து 905 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஒரு சில வேட்பாளர்கள் 2-3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தால் மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது.