டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 105 மிமீ இலகுரக கள பீரங்கிகளைக் கொண்ட பீரங்கி ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி, முழக்கமிடும் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றிய நிலையில், இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலி காப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் படை வலிமையை சாற்றும் வகையில், அா்ஜுன் டாங்கி உள்ளிட்ட பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூா்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சா் அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

 

[youtube-feed feed=1]