மும்பை: இந்தியப் பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் மூலம், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 77% உயர்ந்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டில், இந்திய அளவில் 43% பெண்கள் மட்டுமே வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்த நிலைமை மாறி, 2017ம் ஆண்டில் அந்த அளவு 77% என்பதாக உயர்ந்துள்ளது.
அண்டை நாடுகளான வங்கதேசத்தில் 36% பெண்களும், பாகிஸ்தானில் 7% பெண்களுமே வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அதேசமயம் அவற்றில், பலரின் கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.
எனவே, இந்தவகையில் இந்தியப் பெண்களின் முன்னேற்றம் கவனத்தில் கொள்ளத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நிதி சேவை என்ற அம்சத்தில் இந்தியாவில் நிலவிய பாலின பாகுபாடு, கடந்த 2014-17 வரையிலான 3 ஆண்டுகளில் 14% குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.