வுகாத்தி

சாம் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.9% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நடந்தன.   அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் மோதுகின்றன.  இங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அணி ஆட்சியைத் தொடரவும்,  காங்கிரஸ் அணி ஆட்சியைக் கைப்பற்றவும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.   மொத்தம் 126 தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன.   அடுத்த கட்ட வாக்குப்பதிவு 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

நேற்று வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அளிக்கப்பட்டன.  சமூக இடைவெளியைப்  பின்பற்றி வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.   நேற்று மாலை 6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவில் 76.9% வாக்குப்பதிவு நடந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.