மாட்ரிட்

         ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பேரழிவுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஸ்பெயினையும் நிலைகுலையச் செய்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 738 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர்.   இறந்த உடல்களை வைப்பதற்கு இட         நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, அவர்களை அடக்கம் செய்வதிலும் பெரும் காலதாமதமும், சிக்கலும் நீடித்து வருகிறது.

 

           இறந்தோர் உடல்களை வைப்பதற்கு கடும் இடநெருக்கடி நிலவுவதால் தலைநகரில் உள்ள ‘பலெசியோ தி ஹூலோ’ எனப்படும் ஐஸ் பாலஸில் அவை வைக்கப்பட்டுள்ளன.

       மேலும் ‘சீனியர் சிட்டிசன்கள்’ தங்கியுள்ள ஹோம்களில் பெருமளவு கொரோனாத் தொற்று பரவி வருவதால் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.  இதனால் அங்கு பல முதியவர்கள் படுக்கையிலேயே இறந்து கிடப்பது உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்துயரச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரேட்டா ரெபில்ஸ்,  சீனியர் சிட்டிசன்கள் ஹோம்களில் தனித்து விடப்பட்பட்டது குறித்து தீவிர நீதிவிசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

       ஸ்பெயினில் இது வரை 47000 க்கும் மேற்பட்டோரிடம் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 3434 பேர் உயிரிழந்துள்ளனர்.