டில்லி

துவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் காணப்படுகிறது.  முந்தைய கொரோனாவை விட 70% அதிக வீரியமுள்ள இந்த வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளதால் பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது.  கடந்த நவம்பர் மாதம் 23 முதல் டிசம்பர் மாதம் 23 வரையிலான ஒரே மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர்.  இவர்களைக் கண்டறிந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.  இவர்களைச் சோதனை செய்த போது இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று 73 பேருக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.  இதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப் படுத்தி உள்ளது.