நெட்டிசன்:

“நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்ற தலைப்பில் Vijayasankar Ramachandran   அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு:

சைவம் சாப்பிடுபவன் இந்துவாக இருக்க முடியாது என்று திரு எச். ராஜா கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது.

பொங்களாயி அம்மன் கோயிலில் வருடா வருடம் நடக்கும் ஆட்டுக்கறி விருந்து

நேஷனல் சாம்பிள் சர்வே அமைப்பு (National Sample Survey Organisation) எனப்படும் நிறுவனம் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது பலவித சர்வேக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைப் பற்றிய பல விவரங்களைத் திரட்டி வருகிறது.

இந்தியாவில் அசைவ உணவு உண்ணும் குடும்பங்கள் 1993இல் 56.7 சதமாக இருந்தது. 2004-05 காலகட்டத்தில் இது 58.2 சதமாக உயர்ந்தது. 2011-12இல் இது 62.3 சதவீதமாகி விட்டது.

அரசாங்கத்தின் சென்சஸ் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின் படி 2014இல் அசைவ உணவு உண்ணும் இந்தியர்களின் அளவு 71 சதம் என்று தெரியவந்துள்ளது.

ராஜாவின் கணக்குப்படி பெரும்பாலான இந்துக்கள்  இந்து மதத்திற்கு வெளியே இருப்பது மட்டுமின்றி, பலர் வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

சொப்பனந்தானோ… தோற்ற மயக்கங்களோ

(பின் குறிப்பு: NSSO இனி anti-National Sample Survey Organisation என்று அழைக்கபடும்)