பிரயாக்ராஜ்

த்தரப்பிரதேச மாநில காவல்துறை மகாகும்பமேளாவில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மகாகும்பமேளா’ உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக  விளங்குகிறது. ‘மகா கும்பமேளா 2025’ வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகள் மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சாலை, யில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுவதுடன் சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் காவல்துறை ஐ.ஜி. தருண் காபா செய்தியாளர்களிடம்,

“மகாகும்பமேளா 2025 மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்காக காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் சுமார் 2,700 கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த உள்ளோம். மத்திய மற்றும் மாநில அரசின் அமைப்புகளுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.