படக்ட்
உ பி மாநிலத்தில் நடந்த திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
.
ஆண்டுதோறி, உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் உள்ள்ச் சமண (ஜெயின்) மத வழிபாட்டு தலத்தில் லட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போது பத்கர்கள் லட்டுகளை கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கமாலு,.
இன்று இந்த ஆண்டு லட்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி மதவழிபாட்டு தலத்தில் மூழ்கில் கம்புகளால் மேடை அமைக்கப்பட்டிருந்தது. 100க்கும் அதிமானோர் அந்த மேடையில் ஏறி வழிபாடு நடத்த முற்பட்டனர். எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்தது.
இதனால் 7 பேர் உயிரிழந்து, 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.