ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெளியே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
அஜ்மீர் சாலையில் அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் மீது லாரி மோதியதில் தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் சுமார் 300 மீட்டர் சுற்றளவில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும், இந்த வெடி சத்தம் 10 கி.மீ. வரை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 28 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் சிஎன்ஜி டேங்கர் மீது மற்றொரு லாரி மோதியதால் ரசாயனம் தீப்பற்றி எரிந்ததாவும் இதில் பல லாரிகள் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்ததாகத் தெரிகிறது.