பிரபல முகநூல் பதிவரான ஏழுமலை வெங்கடேசனின் பதிவு

நமக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. ஆஸ்கரன்..,

இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது கோதாவில் பங்கேற்க வருஷா வருஷம் படம் அனுப்புறோம்.. அவனுங்க பெஸ்ட் பாரீன் கேட்டகிரியில கண்டுக்கவே மாட்றானுங்க. டாப்ஃபை…அதான் நாமீனி லெவலுக்கே இதுவரை மூணு தடவைதான் முக்கியிருக்கோம்..

1957ல் வெளியான இந்தி படம் மதர் இண்டியா முதன் முதலா போனப்பவே நாமினி லெவலை எட்டிடிச்சி ஆனா அந்த 1958 ஆஸ்கார்ல அதை நைட்ஸ் ஆப் கரீபியான்ற இத்தாலி படம் காலி பண்ணிடிச்சி..

1989 ல சலாம் பாம்பே போச்சு, ஒரு டென்மார்க் படத்துக்கு குடுத்துப்புட்டானுங்க..

2002ல் அமீர்கானோட லகான் போச்சு.. ஆஸ்கார் லாபி கொஞ்சம் புரிஞ்சி அமீர்கான், தரை ரேஞ்சிலிருந்து ஹைகிளாஸ் லெவல்வரை போய் லாபி பண்ணாரு.. ஆனாலும் நோ மேன்ஸ் லாண்ட்ன்னு போஸ்னியா படத்துகிட்ட லகான் கிளீன் போல்ட் ஆயிடிச்சி..

 

இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படங் கள்ல, நம்ம கமலோடதுதான் அதிகம்.. ஏழு படங்கள்.. ஆனா கமலோ, ஆஸ்காரையெல்லாம் மதிக்கவே மாட்டாரு.. அதுக்காகவே அவருக்கு நாங்க வெச்ச பேரு ஆஸ்கரன்.. அவரையே விருதாக்கிப்புட்டோம்..

ரீரிலீஸ்..

ஆஸ்கருக்கு இதுவரை கமலஹாசன் நடித்த படங்கள், “சாகர் (இந்தி), சுவாதி முத்யம் (தெலுங்கு) , நாயகன், ஹேராம், தேவர் மகன், இந்தியன்,  குருதிப்புனல் ஆகியவை சென்றுள்ளன.

தமிழில் முதன் முதலாக 1969 சிவாஜி நடித்த தெய்வமகன் சென்றது.