காபூல்:
ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாண மின்சார நிலையத்தில் 7 இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இன்று மினி பஸ் மூலம் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ்சை வழிமறித்த பயங்கரவாதிகள் 7 பேரையும் கடத்தி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஆப்கனில் இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆப்கன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம்’’ என்றார்.