வயநாடு

கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்’

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.  நேற்று இரவு கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்தமிகக் கனமழைய்ல் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

முதலில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. பிறகு அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர்.

இதுவரை நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.  ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.