மும்பை

தாறுமாறாக ஓடிய மும்பை மாநகர பேருந்து மோதி 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

மாநில தலைநகர் மும்பையில் உள்ள குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் நேற்று மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது.

இதனால் 7 பேர் பலியாகி 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பேருந்து ஓட்டுநர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

விபத்தை நேரில் பார்த்தவர்களோ ஓட்டுநர்ர் போதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.