சென்னை: தமிழகஅரசின் 7.5 சதவிகிதம் வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைற்று வருகிறது. ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆளுநருக்கு எதிராகவும், மசோதாவுக்கு அனுமதி வழங்கக் கோரியும் கோஷமிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. தற்போத நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உள் ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால், அளுநரின் நடவடிக்கை, 7.5% உள் ஒதுக்கீடு நடப்பாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதற்கு எதிராக உள்ளது. அதனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகஅரசின் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் தெரிவித்துள்ள ஆளுநர், இன்னும் 4 வாரம் கால அவகாசம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது மேலும் காலம்தாழ்த்தும் செயலாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகஅரசின் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள திமுகவினர் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் உடன் டி.ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையொட்டி ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாதபடி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
[youtube-feed feed=1]