தென் அமெரிக்காவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், சுனாமி அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,.

தென் அமெரிக்காவின் டிரேக் பாஸேஜ் (Drake Passage) பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 8 முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
அதேநேரம் பசிபிக் சுமானி எக்காரிகை மையம், டிரேக் பாஸேஜ் நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் கடற்கரையில் அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பல கிமீ தொலைவுக்கு உணரப்பட்டது. மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
டிரேக் பாசேஜ் என்பது சிலியில் உள்ள கேப் ஹார்னை அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து பிரிக்கும் பகுதியாகும். இது உலகின் மிகக் கொந்தளிப்பான நீர்நிலைகளில் ஒன்றாகும். இந்தப் பிராந்தியம் தொலைதூரத்தில் இருப்பதாலும், மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் அடுத்த சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை சில அதிர்வுகள் தொடரும் என தெரிகிறது.