வெலிங்டன்:
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது.
கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவான நிலநடுக்கம் , ஹாக்ஸ் பே உட்பட கிழக்கு கடற்கரையின் பெரும்பகுதி முழுவதும் உணரப்பட்டது. கிஸ்போர்ன், மடவாய், ஓபோடிகி, ரூட்டோரியா, தே அரோரா, தே காஹா, டோகோமாரு விரிகுடா, டோலாகா விரிகுடா, வகாரி அல்லது வெள்ளை தீவு, வகாடனே மற்றும் விட்டியாங்காவில் நிலநடுக்கம் பதிவானது.
உள்ளூர் நேரப்படி, காலை 12.49 மணியளவில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை. எனினும் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.
நீண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்தால் மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து உயர்வான இடங்களுக்கு செல்லுமாறு ரேடியோ நியூசிலாந்து கேட்டுகொண்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.