லக்னோ
இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இன்று நடைபெறும் தேர்தலில் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இன்றைய தேர்தலில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவராக உத்தரப்பிரதேச முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டி இடுகிறார். எனவே இன்றைய வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.