அகமதாபாத்:
குஜராத் சட்டமன்ற 2-ம் கட்ட தேர்தலில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனன.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி 89 தொகுதிகளுக்கு நடந்தது. இதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதை தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு 2ம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு 62.24 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இறுதி நிலவரப்படி 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]