அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் நேற்று, ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் தவிர ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்கள் என மொத்தம் 67 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போடோமேக் ஆற்றின் மீது நிகழ்ந்த இந்த விபத்தில் ஜெட் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை ஆற்றில் விழுந்தது.
இதில் நீரில் மூழ்கிய 27 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெட் விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் விமானத் தரவு மற்றும் குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்த முதல் அறிக்கை 30 நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.