கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 7வது கங்டட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 3.30 மணி வரை 7% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவுக்கப்பட்டது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடை பெற்றுள்ள நிலைவயில், இன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு 34 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 34 தொகுதிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதலே வாக்காளர்கள் ள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல்வர் மம்தாபானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அப்போது இரட்டை விரல் காண்பித்து வெற்றி உறுதி என்பதை வெளிப்படுத்தினார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 34 தொகுதிகளிலும் தோராயாக மாலை 3.30 மணி நிலவரப்படி 67.27% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.