ஜம்பாரா
நைஜீரியாவில் நடந்த படகு விபத்தில் 64 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல் வேண்டி உள்ளது.. இந்நிலையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ ஆற்றில் கவிழ்ந்ததில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீதமுள்ள 6 பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நைஜீரியாவில் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புக் குழு அதிகாரிகள் இது குறித்து,
“70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு விபத்தில் சிக்கியது. மீட்பு பணிகளுக்கு உள்ளூர் மக்கள் உதவினர். 3- மணி நேரமாக போராடி 6 பேரை தான் மீட்க முடிந்தது.
900-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை அணுகுவதற்கு தினமும் ஆற்றைக் கடந்துதான் செல்கிறார்கள்.
ஆனால் வெறும் இரண்டு படகுகள் மட்டுமே உள்ளதால், அதிக அளவில் ஆட்களை படகில் ஏற்றி செல்கிறார்கள். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது”
என்று தெரிவித்துள்ளனர்.