டெல்லி

யர்நீதிமன்றங்களில் கடந்த 30 ஆண்டுகளில் 62000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

அண்மையில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் எக்கச்சக்கமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவற்றில் ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதிலும் உயர்நீதிம்ன்றங்களில் ஆயிரக்கணகான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.  இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ள்ளன

நம் நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 1954 ஆம் ஆண்டில் இருந்து 4 வழக்குகளும், 1955 ஆம் ஆண்டில் இருந்து 9 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தவிர 1952-ம் ஆண்டில் இருந்து 2 வழக்குகள் கொல்கத்தா உயர்நிதிமன்றத்திலும், ஒரு வழக்கு சென்னை உயர்நிதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன என்பதும் இந்த தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.