திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை இப்போது மாறி இருக்கிறது. சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 62 பேரில், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர்.
12 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். 31 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.