புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செப்டம்பர் 30 நிலவரப்படி 854.73 மெட்ரிக் டன் தங்கத்தை வைத்துள்ளது, அதில் 510.46 மெட்ரிக் டன்கள் உள்நாட்டில் கையிருப்பில் உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு தங்கத்தின் கையிருப்பு 102 டன்கள் அதிகரித்து 510.46 மெட்ரிக் டன்னாக இருந்தது, இது மார்ச் மாத இறுதியில் 408 மெட்ரிக் டன்னாக இருந்தது.
324.01 மெட்ரிக் டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (பிஐஎஸ்) ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பில் பாதி, அதாவது 20.26 மெட்ரிக் டன் தங்கம் வைப்புத் தொகையாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது மேலாண்மை ஆண்டு அறிக்கை: ஏப்ரல்-செப்டம்பர் 2024ல் குறிப்பிட்டுள்ளது.
மதிப்பு அடிப்படையில் (USD), மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு மார்ச் 2024 இறுதியில் 8.15 சதவீதத்திலிருந்து செப்டம்பர் இறுதியில் 9.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அரையாண்டு காலத்தை ஒப்பிடுகையில், மார்ச் மாத இறுதியில் 646.42 பில்லியன் டாலராக இருந்த அந்நிய கையிருப்பு செப்டம்பரில் 705.78 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.