ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.
துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்பூரின் தலைமை மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
மகாசிவராத்திரி தினத்தன்று விநியோகிக்கப்பட்ட அன்னப் பிரசாதம் சாப்பிட்ட கிட்டத்தட்ட 60 முதல் 70 பேர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்
மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன. உணவில் நச்சு கலந்திருப்பதாக கருதப்படுவதால் இது தொடர்பாக விசாரணையை அதிகாரிகள் தொடங்கி வருகின்றனர்.