டெல்லி

நேற்றைய 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கன மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நேற்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது;

நேற்று உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு  தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையம் 5 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்குவங்காளத்தில் 76.05 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.